கடந்த மூன்று மாதங்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடு, மாடுகள் உயிரிழந்துள்ளன.


  கிருஷ்ணகிரி அருகே நோய் தாக்கி கடந்த மூன்று மாதங்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடு, மாடுகள் உயிரிழந்துள்ளன.
  காவேரிப்பட்டினம் அருகே உள்ள மேல்கொட்டாய் கிராமத்தில் ஆடுகளும் மாடுகளும் உயிரிழந்து வருவது தொடர் கதையாக நடந்து வருகிறது. இதுவரை இங்கு இருநூறுக்கும் மேற்பட்ட ஆடுகளும், நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகளும் உயிரிழந்துள்ளன.
  வினோத நோய் காரணமாக ஆடுகளும் மாடுகளும் உயிரிழப்பதாக இக்கிராம மக்கள் கூறுகின்றனர். இதைத் தடுக்க கால் நடைத்துறை சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
  இதற்கிடையே இப்பகுதியில் நேற்று உயிரிழந்த இரு மாடுகளின் உடல்களை உடல் கூறு சோதனைக்காக கால்நடை மருத்துவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.