கிருஷ்ணகிரியில் 7வது நாளாக கனிமவளத்துறை அதிகாரிகள் ஆய்வு


   தமிழகத்தில் அதிக கிரனைட் குவாரிகளைக் கொண்டுள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7வது நாளாக கனிமவளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
ஜெகதேவி, கொண்டப்பநாயக்கனூர், போச்சம்பள்ளி உள்ளிட்ட இடங்களில் உள்ள கிரனைட் குவாரிகளில் நேற்று ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்விற்கு 7 பேர் கொண்ட 3 குழுக்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டன. லேசர் கருவிகளின் உதவியுடன் கிரனைட் கற்களின் அளவு, உயரம், பருமன் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டன.
இதுவரை, 6 கிரனைட் குவாரிகளில் ஆய்வு முழுமையாக முடிந்துள்ளதாகக் கூறிய கனிமவளத்துறை அதிகாரிகள், வாரத்திற்கு ஒருமுறை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு ஆய்வறிக்கை அனுப்பப்படும் என்று தெரிவித்தனர்.
-தேனி ராஜா