கிருஷ்ணகிரியில் அனுமதியின்றி இயங்கும் 41 கிரனைட் குவாரிகள்

       
     கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 41 கிரனைட் குவாரிகள் எந்தவித அனுமதியும் இல்லாமல் இயங்கி வருவது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதிலில் தெரியவந்துள்ளது. மேலும், அந்த குவாரிகளுக்கு அபராதமாக விதிக்கப்பட்ட தொகையும்  இதுவரை வசூலிக்கப்படாமல் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
ரூபாய் 179 கோடி எங்கே? தகவல் அறியும் உரிமை சட்டம் உண்மையை வெளிக்கொண்டுவரும் சக்தி வாய்ந்தது என்பதற்கு கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்க துறை கொடுத்திருக்கும் தகவல் சிறந்த உதாரணமாக இருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 41 கிரனைட் குவாரிகள் எந்தவித உரிமமும் இல்லாமல் இயங்கியதை இந்த சட்டம் வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருகிறது. அத்துடன் இந்த குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை  179 கோடி ரூபாய் இன்னும் வசூலிகப்படாமல் இருபதையும் இந்த சட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட பதில் தெளிவுபடுத்தியிருகிறது.
நம்பிக்கை இழந்த மக்கள்: எந்த வித அனுமதியும் இல்லாமல் இந்த குவாரிகள் அதிகாரிகளுக்கு தெரிந்தே இயங்கியதாக சொல்கிறார்கள் இந்த பகுதி மக்கள். மதுரையைவிட தரமான, விலை அதிகமான, லாபம் கொழிக்கும் குவாரிகள் கிருஷ்ணகிரி மலைப்பகுதிகளில் அதிக அளவில் இயங்கிவருவதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். முறைப்படி இயங்கும் குவாரிகளை விட முறைகேடாக இயங்கும் குவாரிகளின் எண்ணிக்கை அதிகம் என்கிறார்கள் இவர்கள்.
ஆட்சியர் விளக்கம் : தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட தகவல்களை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரனிடம் காட்டி விளக்கம் கேட்டது புதியதலைமுறை. அதற்கு இந்த முறைகேட்டை விசாரிக்க துணை ஆட்சியர் தலைமையில் சிறப்பு குழு அமைப்படும் என்றார்.அரசு வருவாயில் ஓட்டை : தொடங்கும்போதே அதிகாரிகளால் தடுக்கப்படாத இந்த குவாரிகள், அரசுக்கு பெரிய அளவில் இழப்பை ஏற்படுத்தியிருகின்றன.