தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் மாவட்டச் செயலாளர் நாகராஜ ரெட்டி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் அவரது சகோதரர் வரதராஜன், மாமனார் லகுமய்யா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் சிறையில் உள்ள ராமச்சந்திரனை இந்த வழக்கு தொடர்பாக கைது செய்த போலீசார், கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர்.
ராமச்சந்திரன் ஏற்கனவே குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது பதிவான வழக்குடன் சேர்த்து, ராமச்சந்திரன் மீது இதுவரை ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இணைய செய்தியாளர்-Er.மாதேஷ்