தளி எம்.எல்.ஏ.க்கு ஜாமின் மறுப்பு உயர்நீதிமன்றம் அதிரடி

            பெரியார் தி.க பிரமுகர் கொலை வழக்கில் கைதாகியுள்ள தளி தொகுதி எம்.எல்.ஏ. ராமச்சந்திரனுக்கு ஜாமின் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. ராமச்சந்திரனின் ஜாமின் மனு மீதான விசாரணையின்போது, கொலை செய்யப்பபட்ட பழனிச்சாமியின் மகன் வாஞ்சிநாதன், ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.
இதேபோன்று எம்.எல்.ஏ ராமச்சந்திரன் தற்போது குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி அக்பர் அலி, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டிருப்பதால் எம்.எல்.ஏ ராமச்சந்திரனுக்கு ஜாமின் வழங்க முடியாது என தெரிவித்தார்.
மேலும் ஜாமின் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். கிருஷ்ணகிரி மாவட்ட பெரியார் தி.க பிரமுகர் பழனிச்சாமி கொலை வழக்கில் கைதான தளி தொகுதி எம்.எல்.ஏ ராமச்சந்திரன் தற்போது சிறையில் உள்ளார். மேலும் கிரனைட் முறைகேடு வழக்குகளில் சிக்கிய இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.                                                                                                                                                                                                                                           இணைய செய்தியாளர்-Er.மாதேஷ்