தர்மபுரி அருகே கலவரம் நடந்த பகுதிகளை ஆதி திராவிட நல ஆணையர் ஆய்வு

          தர்மபுரி அருகே நடைபெற்ற கலவர பகுதிகளை தேசிய ஆதிதிராவிட நல ஆணைய தலைவர் புனியா மற்றும் உறுப்பினர் லதா பிரியகுமார், இயக்குநர் டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் நத்தம் காலனி, அண்ணா நகர், கொண்டம் பட்டி காலனி ஆகிய பகுதிகளை பார்வையிட்டனர். அப்பகுதி மக்களிடம் அவர்கள் விவரங்களை கேட்டறிந்தனர். பின்னர் அவர்கள் பேட்டியில் கூறியதாவது:-

இந்த சம்பவம் கோபத்தில் நடந்தது இல்லை. திட்டமிட்டு செய்யப்பட்ட சம்பவம். இதை திட்டமிட்ட செயலாகவே கருதுகிறோம். பல வீடுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் களவாடபட்டு உள்ளது. பல இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு உள்ளது. இதற்கான நிவாரண பணிகளை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செய்து உள்ளது. மேலும் நடவடிக்கை எடுக்கப்படடு வருகிறது. கலவரப்பகுதிகளில் 40 வீடுகள் முழுமையாக சேதம் அடைந்து உள்ளது.

அந்த வீடுகளை மீண்டும் ரூ.1 1/2 லட்சம் செலவில் கட்டப்பட உள்ளது. 175 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. அந்த வீடுகளை சரி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 122 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். மொத்தம் சுமார் ரூ.6 கோடியே 95 லட்சம் சேதம் அடைந்து உள்ளது. இந்த பகுதி மக்கள் அமைதியாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். மக்கள் குடியிருப்பதற்காக ரூ.12 லட்சம் செலவில் செட் அமைக்கப்பட்டு உள்ளது.
இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்