கிருஷ்ணகிரியில் எருதுவிடும் விழா: ஒருவர் பலி


    கிருஷ்ணகிரி அருகே நடைபெற்ற எருதுவிடும் திருவிழாவில் காளைகள் முட்டி ஒருவர் பலியானார். இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி அருகே இட்டிக்கல் அகரம் கிராமத்தில் எருதுவிடும் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலிருந்து 50-க்கும் மேற்பட்ட எருதுகள் கலந்து கொண்டன.
இந்த விழாவில் சீறிப் பாய்ந்து வந்த எருதுகளுக்கு நடுவே முகனூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் எருதும் ஓடியது. அவரைத் தொடர்ந்து நாகராஜும் ஓடியபோது, பின்னால் வந்த மற்றொரு எருது அவரை முட்டியது. இதனால் தூக்கி வீசப்பட்ட நாகராஜ் இன்று காலை உயிரிழந்தார்.
                            -இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்