கொலை வழக்கில் தேடப்பட்ட தளி எம்.எல்.ஏ., நீதிமன்றத்தில் சரண்

   கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த தளி எம்.எல்.ஏ ராமச்சந்திரன் நீதிமன்றத்தில் சரணடைந்தார். எம்.எல்.ஏ வுடன் அவரது மாமனார் லகுமையா, மைத்துனர் கேசவமூர்த்தி உட்பட 5 பேர் திருவண்ணாமலை முதலாவது நீதிமன்ற நடுவர் விஜயா முன்பு சரண் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட பெரியார் தி.க பிரமுகர் பழனி கொலை வழக்கில் இவர்கள் அனைவரும் தேடப்பட்டு வந்தனர். தலைமறைவாக இருந்த ராமச்சந்திரனின் முன் ஜாமீன் மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடியானது. இதனையடுத்து ராமச்சந்திரன் கோர்ட்டில் சரணடைந்துள்ளார்.
-இணைய செய்தியாளர் - ஈஸ்வரன்