சிவகாசியில் விபத்து இல்லாமல் பட்டாசுகள் வெடிப்பது குறித்த
விழிப்புணர்வுக்கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் கோட்ட தீயணைப்பு நிலையம்
சார்பில் நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வுக் கூட்டத்தில் பள்ளி மாணவ
மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், தீபாவளியின் போது வீடுகளில்
பட்டாசுகளை பாதுகாப்பாக எப்படி வெடிப்பது குறித்து அதிகாரிகள் விளக்கிக்
காட்டினர். மேலும் அவசர காலத்தில், அவசர போலீஸ் 100, தீயணைப்புத் துறை
101, ஆம்புலன்ஸ் சேவை 108 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளும் முறைகள்
குறித்தும் விளக்கிக் கூறப்பட்டது. பின்னர் விழிப்புணர்வு குறித்த துண்டு
பிரசுரங்களையும் தீயணைப்புத்துறை கோட்ட அலுவலர் மனோகரன் வழங்கினார்.
இணைய செய்தியாளர் -Er.மாதேஷ்